மாதாந்திர தொடர் இரத்ததான முகாம். முயற்சி அலுவலகம். 28 -10 -2018

முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் முயற்சி அலுவலகத்தில் 28 -10 -2018 ஞாயிறு அன்று நடைபெற்றது. இம்முகாமிற்கு முயற்சி முகாம் பொறுப்பாளர் சதிஷ் நாக்டா தலைமை தாங்கினார். சாய்கணேஷ் வரவேற்புரை வழங்கினார். வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் தாராபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகர் தலைமையில் 24 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. முகாம் பொறுப்பாளர்கள் சிவகுமார், பரசுராமன், பாலசுப்ரமணியம், ஜோதிமலர், தமிழ்செல்வி, அரவிந்தன் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். வடக்கு முகாம் பொறுப்பாளர் மயில்சாமி நன்றியுரை வழங்கினார்.

About the Author

has written 146 stories on this site.

Copyright © 2018 Muyarchi People's Trust. All rights reserved.
Design & Site Maintenance by 4M Designer