மாதாந்திர தொடர் இரத்ததான முகாம். முயற்சி வடக்கு – பரணி முகாம் & ஸ்ரீ சரண் முகாம். 14-10-2018

முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் 14-10-2018 ஞாயிறு அன்று கீழ்க்கண்ட இரண்டு இடங்களில் நடைபெற்றது.

1) பரணி பெட்ரோல் பங்க் வளாகம், பெரியார் காலனி.
இங்கு நடைபெற்ற முகாமிற்கு முயற்சி வளர்ச்சி குழு உறுப்பினர் ராஜு தலைமை தாங்கினார். வடக்கு முகாம் பொறுப்பாளர் முரளிகுமார், சாய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரதராஜ் வரவேற்புரை வழங்கினார். வளர்ச்சி குழு உறுப்பினர் சுப்பிரமணியம் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 30 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. வடக்கு பகுதி முகாம் பொறுப்பாளர் சிவக்குமார் நன்றியுரை வழங்கினார். முகாம் ஏற்பாடுகளை பொறுப்பாளர்கள் பாலகிருஷ்ணன், கணேசன், மயில்சாமி, சுந்தரபாண்டியன், தமிழ்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

2) ஸ்ரீசரன் மருத்துவமனை வளாகம், போயம்பாளையம் பிரிவு
இங்கு நடைபெற்ற முகாமிற்கு வடக்கு பகுதி முகாம் பொறுப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார். வேணுகோபால் வரவேற்புரை வழங்கினார். வடக்கு முகாம் பொறுப்பாளர் சம்பத்குமார் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 18 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ் நன்றியுரை வழங்கினார். முகாம் ஏற்பாடுகளை பொறுப்பாளர்கள் பரசுராமன், மஞ்சுளாதேவி ஆகியோர் செய்திருந்தனர்.

About the Author

has written 146 stories on this site.

Copyright © 2018 Muyarchi People's Trust. All rights reserved.
Design & Site Maintenance by 4M Designer