மாதாந்திர தொடர் இரத்ததான முகாம். முயற்சி அலுவலகம். 23 -09 -2018

முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் முயற்சி அலுவலகத்தில் 23 -09 -2018 ஞாயிறு அன்று நடைபெற்றது. முயற்சி முகாம் பொறுப்பாளர் பாண்டித்துரை தலைமை தாங்கினார். தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ் முன்னிலை வகித்தார். வடக்கு முகாம் பொறுப்பாளர் வரதராஜ் வரவேற்புரை வழங்கினார். முயற்சி முகாம் பொறுப்பாளர் சதிஷ் நாக்டா இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் மஞ்சுளா தலைமையில் 36 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. முகாம் பொறுப்பாளர்கள் சாய்கணேஷ், மயில்சாமி ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். முயற்சி வளர்ச்சி குழு உறுப்பினர் ராஜு நன்றியுரை வழங்கினார்.

About the Author

has written 146 stories on this site.

Copyright © 2019 Muyarchi People's Trust. All rights reserved.
Design & Site Maintenance by 4M Designer