தொடர் இரத்ததான முகாம் துவக்கம்

முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் பி.என்.ரோடு ஸ்ரீ சரண் மருத்துவமனையில் அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் 17-07-2016 ஞாயிறு துவங்கப்பட்டது. இம்முகாமிற்கு திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டல தலைவர் J .R ஜான், ஸ்ரீ சரண் மருத்துவமனை சேர்மன் Dr. A.M.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகிக்க, ஜூபிலி டெக்ஸ் உரிமையாளர் V.M. கந்தசாமி தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் K.N. விஜயகுமார் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.
20 வது வார்டு மாமன்ற உறுப்பினர் P. விஜயகுமார், 19 வது வார்டு மாமன்ற உறுப்பினர் V.பட்டுலிங்கம், 3வது வார்டு மாமன்ற உறுப்பினர் K.மாரப்பன், 17வது வார்டு மாமன்ற உறுப்பினர் P.பாலன், திருமுருகன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சேவாரத்னா Dr.G.மோகன், செல்வாஸ் கார்மெண்ட்ஸ் உரிமையாளர் S.துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

IMG-20160718-WA0010IMG-20160718-WA0020IMG-20160718-WA0021

About the Author

has written 146 stories on this site.

Copyright © 2018 Muyarchi People's Trust. All rights reserved.
Design & Site Maintenance by 4M Designer