தேசிய இரத்தக்கொடையாளர் தின சிறப்பு இரத்ததான முகாம். காயத்ரி மஹால் .01 -10 -2018

தேசிய இரத்தக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீபுரம் அறக்கட்டளை, நிப்ட் டீ கல்லூரி, நேஷனல் சர்வீஸ் ஸ்கீம், வைப்ரன்ட் திருப்பூர் , TEA Foundation, ஸ்வான் அமைப்பு, TSSS மற்றும் முயற்சி மக்கள் அமைப்பு இணைந்து நடத்திய அரசு மருத்துவமனைகளுக்கான சிறப்பு இரத்ததான முகாம் 01 -10 -2018 திங்கள் அன்று காங்கேயம் ரோட்டில் உள்ள காயத்ரி மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஸ்ரீபுரம் அறக்கட்டளை தலைவர் திரு.ஜெயசித்ரா A. சண்முகம் தலைமை தாங்கினார். ஸ்ரீபுரம் அறக்கட்டளை பொருளாளர் திரு.மெஜெஸ்டிக் K.கந்தசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். TEA Foundation துணை தலைவர் திரு.ராகம் R.முருகேசன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் திரு.ராஜா M.சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திருப்பூர் சார் ஆட்சியர் திரு.J.ஷ்ரவன்குமார் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு 80 யூனிட்டுகளும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு 70 யூனிட்டுகளும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 67 யூனிட்டுகளும், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு 59 யூனிட்டுகளும், உடுமலை அரசு மருத்துவமனைக்கு 55 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. ஸ்ரீபுரம் அறக்கட்டளை சேர்மன் திரு.A.M.சண்முகம், TEA துணை தலைவர் திரு.M.வேலுசாமி, முயற்சி மக்கள் அமைப்பு தலைவர் திரு.N.சிதம்பரம், நிப்ட் டீ கல்லூரி சேர்மன் திரு.C.M.N.முருகானந்தம், TSSS இணைச்செயலாளர் திரு.M மணி, SWAN ஒருங்கிணைப்பாளர் திருமதி.V.கௌசல்யா தேவி, ஸ்ரீபுரம் அறக்கட்டளை செயலாளர் திரு.A.L.காண்டீபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். TEA பொது செயலாளர் திரு.T.R.விஜயகுமார் நன்றியுரை கூறினார்.

About the Author

has written 146 stories on this site.

Copyright © 2019 Muyarchi People's Trust. All rights reserved.
Design & Site Maintenance by 4M Designer