சிறப்பு இரத்ததான முகாம். 31-10-2018

அன்னை இந்திரா காந்தி நினைவு நாள் மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டுதிருப்பூர் மாவட்ட காங்கிரஸ் சேவாதளம் மற்றும் முயற்சி மக்கள் அமைப்பு இணைந்து நடத்திய அரசு மருத்துவமனைக்கான சிறப்பு இரத்ததான முகாம் முயற்சி அலுவலகத்தில் 31-10-2018 புதன் அன்று நடைபெற்றது. இம்முகாமை திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இம்முகாமில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் மஞ்சுளா தலைமையில் 16 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் நல்லூர் திரு.கோபால் வாழ்த்துரை வழங்கினார். திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் சேவாதள தலைவர் திரு. சிவசுப்பிரமணியம் நன்றியுரை வழங்கினார். இம்முகாமில் முயற்சி அமைப்பு தலைவர் சிதம்பரம், செயலாளர் பரமசிவம், வளர்ச்சிக்குழு உறுப்பினர் ராஜு, தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ், முகாம் பொறுப்பாளர்கள் வரதராஜ், சாய்கணேஷ், முரளிகுமார், தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

About the Author

has written 146 stories on this site.

Copyright © 2018 Muyarchi People's Trust. All rights reserved.
Design & Site Maintenance by 4M Designer