குடியரசு தின சிறப்பு ரத்த தான முகாம்கள்

முயற்சி மக்கள் அமைப்பின் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு 26-01-2016 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை அரசு மருத்துவமனைகளுக்கான சிறப்பு இரத்ததான முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற்றது.

1. முயற்சி அலுவலகம், பி.என். ரோடு,திருப்பூர்
முயற்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின இரத்ததான முகாமிற்கு முயற்சி மக்கள் அமைப்பின் நிறுவன தலைவர் திரு.N.சிதம்பரம், திரு.சதீஷ் H நாக்டா, திரு.ஜாகீர் ஹுசேன் ஆகியோர் முன்னிலை வகிக்க, திரு.M.பெரியசாமி தலைமை தாங்கினார்.  ARS மருத்துவமனை சேர்மன்
திரு.Dr. S.ஆனந்தகுமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தும், திருப்பூர் அரசு மருத்துவமனை இரத்ததான முகாமையும் தொடங்கி வைத்தார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனை இரத்ததான முகாமை ரூபா மருத்துவமனை சேர்மன்
திரு.Dr. V.G சந்திரசேகர் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் இரத்ததான கொடையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. திரு. K.மாரப்பன், திரு.M.முத்து நடராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த இரத்ததான முகாமில் 166 யூனிட்கள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை முயற்சி அலுவலக முகாம் பொறுப்பாளர்கள் திரு.ராஜு, திரு.கதிர்வேல், திரு.K.P. முருகன், திரு.சாய்கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

2.பரணி பெட்ரோல் பங்க் வளாகம். பெரியார் காலனி பஸ் நிறுத்தம், அவினாசி ரோடு.
இங்கு நடந்த குடியரசு தின இரத்ததான முகாமிற்கு திரு.சுப்பிரமணியம், திரு.வரதராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்க, திரு.பரணி M.நடராஜ் தலைமை தாங்கினார்.
சக்தி பில்டர்ஸ் உரிமையாளர் திரு.Rtn.T.ஆறுமுகம் மேட்டுபாளையம் அரசு மருத்துவமனை இரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். ஸ்ரீ சரண் மருத்துவமனை சேர்மன்
திரு.Dr. A.M.பழனிசாமி, திரு,முரளிகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த இரத்ததான முகாமில் 105 யூனிட்கள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை வடக்கு பகுதி பொறுப்பாளர்கள் திரு.பாலகிருஷ்ணன், திரு.கணேசன், திரு.சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

3.பானு மருத்துவமனை வளாகம், தென்னம்பாளையம் பஸ் நிறுத்தம்,பல்லடம் ரோடு,திருப்பூர்.
இங்கு நடந்த குடியரசு தின இரத்ததான முகாமிற்கு திரு.பாண்டியன், திரு.ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகிக்க, திரு.ரங்கராஜ் தலைமை தாங்கினார். பானு மருத்துவமனை சேர்மன் திரு.Dr.S.கணேசன் தாராபுரம் அரசு மருத்துவமனை இரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.
திரு.Rtn. Er. S.செந்தில்குமார், திரு,Sifu.C.சுகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த இரத்ததான முகாமில் 134 யூனிட்கள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை தெற்கு பகுதி பொறுப்பாளர்கள் திரு.சதீஷ்குமார், திரு.ஆறுமுகம் ஆகியோர் செய்திருந்தனர்.

மேற்கண்ட மூன்று இடங்களில் நடைபெற்ற இரத்ததான முகாம்கள் மூலம் மொத்தம் 405 யூனிட்கள் இரத்தம் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.

இதுவரை கடந்த 80 மாதங்களில் தொடர் இரத்ததான முகாம்கள் மூலமாக 30000 யூனிட்டுகளை முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.

இரத்ததான கொடையாளர்கள் அனைவருக்கும் முயற்சி மக்கள் அமைப்பின் நெஞ்சார்ந்த நன்றி..

IMG_20160126_090805IMG_20160126_090811DSCN6977DSCN6972DSCN6986DSCN6998DSCN6995DSCN6990DSCN7000DSCN7001DSCN7004IMG-20160127-WA0008IMG-20160127-WA0029IMG-20160126-WA0105IMG-20160126-WA0044

About the Author

has written 146 stories on this site.

Copyright © 2018 Muyarchi People's Trust. All rights reserved.
Design & Site Maintenance by 4M Designer