இரயில் நிலைய தூய்மைப்பணி. 02 -10 -2018

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்னக இரயில்வே சேலம் கோட்டம் திருப்பூர் இரயில் நிலையம் மற்றும் முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் 02 -10 -2018 செவ்வாய் அன்று திருப்பூர் இரயில் நிலையத்தில் தூய்மைப்பணி நடைபெற்றது. இத்தூய்மைப்பணிக்கு சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் S.இராமையா, அன்னை மெட்ரிக் மேனிலைப்பள்ளி தலைவர் திரு S.கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். Senior DST சேலம், Salem Railways திரு LN.சிவநாத் பாபு, லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் சௌத் சிட்டி தலைவர் அரிமா P.முத்துகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு S.குணசேகரன் தூய்மைப்பணியை துவக்கி வைத்தார். இந்த தூய்மைப்பணியில் AVP மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள், சக்தி விக்னேஸ்வர மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள், அன்னை மெட்ரிக் மேனிலைப்பள்ளி மாணவர்கள், அரோமா ஹோட்டல் பணியாளர்கள், டோமினோஸ் பீட்சா பணியாளர்கள், விவேகானந்தா சேவாலயம், லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் சௌத் சிட்டி, மற்றும் இரயில் நிலைய பணியாளர்கள் பங்கேற்று திருப்பூர் இரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தினார்கள்.

About the Author

has written 146 stories on this site.

Copyright © 2019 Muyarchi People's Trust. All rights reserved.
Design & Site Maintenance by 4M Designer