இரயில் நிலைய தூய்மைப்பணி . 23 -09 -2018

முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் 23 -09 -2018 ஞாயிறு அன்று திருப்பூர் இரயில் நிலையத்தில் தூய்மைப்பணி நடைபெற்றது. முயற்சி மக்கள் அமைப்பு தலைவர் சிதம்பரம் தலைமை தாங்கினார். செயலாளர் பரமசிவம், திருப்பூர் லயன்ஸ் கிளப் ஆப் காட்டன் சிட்டி பொருளாளர் அரிமா பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முயற்சி வளர்ச்சி குழு உறுப்பினர் ராஜு வரவேற்புரை வழங்கினார். ரயில்வே கமிட்டி மெம்பர் சுரேஷ் இரயில் நிலைய தூய்மைப்பணியை துவக்கி வைத்தார். முயற்சி வளர்ச்சி குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். இந்த தூய்மைப்பணியில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி NSS மாணவர்கள், அவிநாசி சமாதானம் அமைப்பு மற்றும் திருப்பூர் இரயில் நிலைய பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு திருப்பூர் இரயில் நிலையத்தை தூய்மை செய்தனர்.

About the Author

has written 146 stories on this site.

Copyright © 2019 Muyarchi People's Trust. All rights reserved.
Design & Site Maintenance by 4M Designer