இரத்ததான முகாம்கள் – 11 -12 -2016

 

திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் முயற்சி மக்கள் அமைப்பு இணைந்து நடத்திய அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் 11 -12 -2016 ஞாயிறு அன்று குமரன் ரோடு டவுன்ஹால் அருகில் உள்ள திருப்பூர் அரிமா சங்க வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமிற்கு திருப்பூர் அரிமா சங்க தலைவர் அரிமா.சதாசிவம் தலைமை வகித்தார். அரிமா.PP.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்ட ஜல்லி கிரஷர் உரிமையாளர்கள் அசோசியேஷன் தலைவர் பாலசுப்ரமணியம் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் யாகூப் தலைமையில் 28 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஜல்லி கிரஷர் உரிமையாளர்கள் அசோசியேஷன் செயலாளர் பாலசுப்ரமணியம், திருப்பூர் அரிமா சங்க பொருளாளர் நவீன்குமார் ஆகியோர் இரத்தக்கொடையாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள். முகாம் ஏற்பாடுகளை அரிமா.தமிழ்செல்வி, அரிமா.சுப்பிரமணி, அர்ஜுன், பத்மநாபன், அரோமா ஆறுமுகம் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் அன்றைய தினம், முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் அவிநாசி ரோடு, பெரியார் காலனியில் உள்ள பரணி பெட்ரோல் பங்க் வளாகத்திலும் நடைபெற்றது. இம்முகாமிற்கு முகாம் பொறுப்பாளர் சிவகுமார் தலைமை வகித்தார். பாண்டித்துரை முன்னிலை வகித்தார். வடக்கு பகுதி முகாம் பொறுப்பாளர் கணேசன் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 25 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை முகாம் பொறுப்பாளர்கள் சுப்பிரமணியன், முரளிகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

About the Author

has written 146 stories on this site.

Copyright © 2018 Muyarchi People's Trust. All rights reserved.
Design & Site Maintenance by 4M Designer